.தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் மழை என்பது அதிகமாக பெய்து வருகிறது. குறிப்பாக நேற்றைய தினம் வடதமிழக மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைப்பொழிவு என்பது அதிகமா இருந்தது.

வடகிழக்கு பருவமழை காரணாமாகவும், இலங்கைக்கு தெற்கே ஏற்பட்டுள்ள வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் அடுத்த 24 மணி மணி நேரத்தில் தமிழகத்தின் வடமாவட்டங்களான , சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் சென்னை வானிலை மையம் விடுத்துள்ளது. சென்னையை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு என்பது மிக அதிகமாக இருப்பதாகவும் இன்று மாலைக்கு பிறகு இந்த பகுதிகளை நோக்கி மேக கூட்டம் நகர்ந்து வரும் என்பதால் இந்த பகுதிகளில் மாலை முதல் நள்ளிரவு வரை மிக அதிக அளவில் மழைபெய்யும் என்றும் ஒருசில நகர் புறப்பகுதிகளில் குறுகிய காலத்தில் அதிக அளவு மழைப்பொழிவு இருப்பதற்கு  வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டிருக்ககூடிய செயற்கைகோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ. மழையும், பெரம்பூரில், 12 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இன்று காலை 8.30 மணி முதல் மதியம் 2.30 மணிவரையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 7செ.மீ. அளவும், சென்னை மீனம்பாக்கத்தில் 5 செ.மீ. அளவும், நாகப்பட்டினம், 3செ.மீ. புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ. மழை அளவும் பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக இந்த மழையின் அளவு என்பது இன்று மாலைக்கு பிறகு அதிகரிக்க கூடும் என்ற நிலையில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்பையில் வருவாய்துறை, சுகாதாரதுறை உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளுக்கு இந்த எச்சரிக்கையானது அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: