சர்தார் வல்லபாய் படேலின் 147-வது பிறந்தநாள்: 597 அடி சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

குஜராத் : சர்தார் வல்லபாய் படேலின் 147-வது பிறந்தநாளை ஒட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இந்தியாவின் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் ஆவார். அவருடைய 147-வது பிறந்த தினமான இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து குடியரசு துணை தலைவர் ஜகதீப் தங்கர், உள்துறை அமைச்சர் அமித் சா உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செய்தனர். குஜராத் மாநிலம் கெவாடியா கிராமத்தில் நர்மதா ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் வல்லபாய் படேலின் 597அடி பிரமாண்ட சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின சிறப்பு நிகச்சிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். தெலுங்கானாவில் நடைபயணம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியும் சர்தார் வல்லபாய் படேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

Related Stories: