சுற்றுலா தலமான ஏலகிரி செல்பி பார்க்கில் குழந்தைகள் உற்பத்தி செய்யும் சாக்லேட்-வீட்டிற்கு எடுத்துச் செல்லவும் அனுமதி

ஏலகிரி : சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் தென்னிந்தியாவில் முதன்முதலாக துவங்கப்பட்ட செல்பி பார்க்கில் குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் சாக்லேட் உற்பத்தி செய்கின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கி கிராமங்களைச் சுற்றிலும் மலைகளால் சூழப்பட்டு பசுமையாக காட்சியளிக்கிறது. ஏலகிரி மலை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இது ஒரு தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. ஏலகிரி மலையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

முக்கிய  சுற்றுலா தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, பறவைகள் சரணாலயம், சாகச விளையாட்டுகள், செல்பி பார்க், அரசு  மூலிகைப்பண்ணை, பழப்பண்ணை, சுவாமிமலை-மலையேற்றம், முருகன் கோவில், தொலைநோக்கி இல்லம், ஸ்ரீகதவ நாச்சியம்மன்  ஆலயம், மங்கலம் தாமரைக்குளம் ஆகியவை மைந்துள்ளது.

இம்மலையின் உயரம் 1410.60 மீ உயரத்தில் பசுமை நிறைந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ளது. மற்றும் ஏலகிரி மலைபாதை ஏறும்போது 14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டுள்ளன. ஏலகிரி மலையில் உள்ள  செல்பி பார்க்கில் அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக இங்கு குழந்தைகள் உற்பத்தி செய்யும் சாக்லேட்டுகளை அவர்களே வீட்டிற்கு எடுத்துச் செல்லும்  முறை உள்ளது.

இதனால் இங்கு விடுமுறை தினங்களிலும், மற்ற நாட்களிலும் அனேக சுற்றுலாப் பயணிகள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியோடு சென்று வருகின்றனர். இங்கு இரவு நேரங்களில் கண் கவரும் வண்ணமாக அமைந்துள்ளது. இந்த செல்பி பார்க்கில் குழந்தைகளுக்காகவே அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்தச் சுற்றுலா தளத்தில் செல்பி எடுப்பதற்கான பல்வேறு வகையான மிகவும் சிறப்பாக பொம்மைகளும், செல்பி கூடாரங்கள், வண்ணத்துப்பூச்சி போன்ற பல்வேறு அமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த செல்பி பார்க்கில் மிகக் குறைந்த கட்டணத்தில் சென்று அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம் என்று உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும், நண்பர்களுடனும், இங்கு அமைந்துள்ள செல்பி அமைப்புகளில் நின்று மகிழ்ச்சியாக செல்பி எடுத்து செல்கின்றனர்.

Related Stories: