சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை; எம்எல்ஏ வழங்கினார்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில், 250 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார். தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, திருவொற்றியூர் பெரியார் நகர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கே.பி.சங்கர் எம்எல்ஏ தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ராமலட்சுமி, முத்துச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 250 கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, நலங்கு வைத்து, அவர்களுக்கு புடவை, பழம், பூ மாலை, வளையல், பேரிச்சம்பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட சீர் வரிசைகளை கே.பி.சங்கர் எம்எல்ஏ வங்கினார்.

தொடர்ந்து, வளைகாப்பு நடத்தப்பட்டு ரொக்க பணம் வழங்கி, கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சத்துணவு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்றவை குறித்து கண்காட்சி வைக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சுகாதார அதிகாரி டாக்டர் மாலதி, கஸ்தூரி சங்கர், ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், டாக்டர் பிரியா, கவுன்சிலர் கே.பி.சொக்கலிங்கம், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: