50-வது நாளாக ராகுல்காந்தி ஒற்றுமை பயணம்: 3 நாள் ஓய்வுக்கு பின் மீண்டும் பயணத்தை தொடங்கினார்

ஐதராபாத்; 3 நாள் ஓய்வுக்கு பின்னர் இந்தியா ஒற்றுமை பயனத்தை தெலுங்கானாவில் இருந்து இன்று காலை ராகுல்காந்தி மீண்டும் தொடங்கியுள்ளார். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக இந்தியா ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.

கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் கடந்த 23-ம் தேதி தெலுங்கானா மாநிலத்திற்குள் நுழைந்தது. அத்துடன் தீபாவளிக்காக மூன்று நாட்கள் ஓய்வு விடப்பட்டது. இந்த நிலையில் தெலுங்கானாவில் நாராயண்பேட்டை மாவட்டத்தில் உள்ள மக்தாலில் இன்று காலை ஒற்றுமைப் பயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். 50-வது நாளாக அவர் பயணத்தை தொடர்கிறார்.

இன்று மட்டும் சுமார் 27 கிலோமீட்டர் தூரம் நடக்கும் ராகுல் காந்தி இரவில் மக்தாலில் உள்ள ஸ்ரீபாலாஜி தொழிற்சாலையில் ஓய்வெடுக்கிறார். செல்லும் வழியில் அரசியல், விளையாட்டு, வர்த்தகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களை ராகுல்காந்தி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: