வேதாரண்யத்தில் செவ்வந்திப் பூ விலை கிடு கிடு உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் செவ்வந்திப் பூ விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், பஞ்சநதிக்குளம் நெய்விளக்கு குரவப்புலம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செவ்வந்திப் பூ சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள் அடர்த்தி மிகுந்து பந்து போல காணப்படுவதால் இப்பகுதி செண்டி பூக்களுக்கு நல்ல மவுசு. நாள்தோறும் இங்கு விலையும் செவ்வந்திப் பூக்கள் கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகள் மட்டுமின்றி உள்ளூர் பூ வியாபரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தொழிலை நம்பி ஏராளமான குடும்பத்தினர் உள்ளனர்.

வழக்கமாக இங்கு விளையும் சென்டி பூ ஒரு கிலோ ரூ.20 முதல் 40 வரை விற்பனையாகும், இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு செண்டி பூக்களின் விலை ஒரு கிலோ ரூ.120 முதல் முதல் 150வரை விற்பனையானது. இனிமேல் ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து செல்ல இருப்பதால் இந்த விலை ஏற்றும் இனி இரண்டு மாதங்களுக்கு குறையாது. செண்டி பூ விலை ஏற்றத்தால் வேதாரண்யம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: