இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக்கை நியமித்தார் அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ்..!!

லண்டன்: பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக், மன்னர் 3ம் சார்லஸை சந்தித்தார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து, முறைப்படி பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக் பதவியேற்பார் என்று தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனாக்கை அந்நாட்டு மன்னர் 3ம் சார்லஸ் நியமித்தார். இங்கிலாந்தில் புதிய ஆட்சியை அமைக்குமாறு பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்தார். மன்னர் 3ம் சார்லஸின் ஒப்புதலை அடுத்து பிரிட்டிஷ் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனாக் பதவியேற்றார். இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ஏற்கனவே பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவி விலகினார்.

லிஸ் டிரஸ் பதவி விலகியதை தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராகத் ரிஷி சுனக் தேர்நதெடுக்கப்ட்டர். பிரிட்டனின் 57-வது  பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர் ஆவார். கடந்த 200 ஆண்டுகளில் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற இளம் வயது தலைவர் ரிஷி சுனக் (42) என்பது குறிப்பிடத்தக்கது.

*ரிஷி சுனக் உரை

பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமது அதிகாரப்பூர்வ வீட்டு வாயிலில் நின்று மக்களுக்கு ரிஷி சுனக் உரையாற்றி வருகிறார்.முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் எடுத்த நடவடிக்கைகளை குறை கூறவில்லை என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை கொண்டுள்ளது. இங்கிலாந்தின் பொருளாதாரத்தை கையாள்வதில் சில தவறுகளை லிஸ் ட்ரஸ் செய்துவிட்டார். நல்ல நோக்கத்துடன் தான் லிஸ் ட்ரஸ் நடவடிக்கைகளை எடுத்தார் எனினும் சில தவறுகள் நடந்துவிட்டது.

நாட்டின் பொருளாதார உறுதி நிலையை ஏற்படுத்துவதே தமது அரசின் முதல் திட்டமாகும் என ரிஷி சுனக் கூறினார்.ஏற்கனவே நடந்துவிட்ட தவறுகளை சரிசெய்யவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டுளேன் என்று ரிஷி சுனக் கூறியுள்ளார். எனது நடவடிக்கைகளின் மூலம் காட்சியிலும் நாட்டிலும் ஒற்றுமையே உருவாக்குவேன் என ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். மக்களின் நலனுக்காக இரவு பகலாக உழைக்க உறுதி ஏற்பதாகவும் ரிஷி சுனக் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: