கார் வெடிப்பில் பலியான பொறியாளர் ஜமேஷா முபின் யார்? வீடு அருகே இருந்த சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி

கோவை: கோவை உக்கடம் பகுதியில் நேற்று நடைபெற்ற கார் வெடிப்பில் உயிரிழந்த பொறியாளர் வீட்டில் வெடிபொருட்கள் சிக்கியிருப்பதால் அவரது பின்னனி குறித்து விசாரணை மேலும் தீவிர அடைந்துள்ளது. கோவை உக்கடம் பகுதிக்கு உட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை மாருதி 800 கார் மர்மமான முறையில் வெடித்து சிதறியது. இதில் காரை ஓட்டிய நபர் உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் கோவை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே தொடர் குண்டு வெடிப்புகளை எதிர் கொண்ட நகரம் என்பதோடு தீபாவளி நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் இதில் வேறு ஏதேனும் சதி இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

டிஜிபி சைலேந்திரபாபு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் ஆகியோர் சென்னையில் இருந்து கோவைக்கு விரைந்து விசாரணை தீவிர படுத்தினர். விபத்தில் இறந்தவர் யார், கார் வெடித்து சிதற என்ன காரணம் அதில் சிலிண்டர் எற்றி செல்ல பட்டதன் பின்னனி என்ன என்பது குறித்து 6 தனிப்படைகள் அமைத்து விசாரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 12 மணி நேரத்தில் இறந்த நபர் அடையாளம் காணப்பட்டார். அவர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான பொறியாளர் ஜமேஷா முபின் தெரியவந்தது. அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் வெடிபொருட்கள் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பொட்டாசியம் குளோரைடு, அலுமினியம் நைட்ரைடு, சல்பர் போண்ர வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஜமேஷா மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்றாலும் அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ 2019 - ஆம் ஆண்டே விசாரணை நடத்தியிருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். இதற்கிடையே தற்கொலை படை தாக்குதலுக்கு ஜமேஷா முபின் திட்ட மிட்டாரா என்ற தகவல் பரவியது. அதனை காவல் துறையினர் மறுத்திருக்கின்றனர். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிர வாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதா என மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ஐஏ விசாரணை மட்டும் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

உக்கடத்தில் வெடித்து சிதறிய கார் சென்னையில் பதிவு செய்யப்பட்டதாகும். அந்த கார் இதுவரை 9 பேரிடம் கை மாறியுள்ளது. 10-வது நபரான ஜமேஷா முபினிடம் இருந்த போது தான் கார் வெடித்து சிதறி உள்ளது. எனவே கார் உரிமையாளர்கள் மற்றும் இறந்தவரோடு தொடர்பில் இருந்த அனைவரும் விசரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். ஜமேஷா சிலிண்டர் சப்ளை செய்தவர் யார், ஒரே நேரத்தில் காரில் இரண்டு சிலிண்டர்கள் ஏற்றி சென்றது ஏன், போலீஸ் சோதனைக்கு பயந்து காரை விட்டு இறங்க முயற்சித்த நேரத்தில் சம்பவம் நடந்ததா என்பது குறித்து  போலீஸ் விசாரணை நீடிக்கிறது.

இந்த நிலையில் ஜமேஷா வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில் கார் வெடிப்பு சம்பவத்திற்கு 5 மணி நேரத்திற்கு முன்பு அவரது விட்டில் இருந்து 5 மர்ம நபர்கள் மர்ம மூட்டைகளை வெளியே தூக்கி வரும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மூட்டையில் இருந்த மர்ம பொருள் என்ன ஜமேஷா உயிரிழந்து விட்ட நிலையில் அவருடம் இருந்த 4 பேர் யார்  என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகப்பு மற்றும் கண்கானிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: