36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ‘எல்விஎம்-3’ ராக்கெட்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 36 செயற்கைகோள்களுடன் ‘எல்விஎம்-3’ ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.   

இந்தியாவின் மிக பெரிய பிரமாண்ட ராக்கெட்டாக ஜிஎஸ்எல்வி ரகத்தை சேர்ந்த ‘எல்விஎம்-3’ கருதப்படுகிறது. இதன் மூலம், ஒரே நேரத்தில் 36 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வகை ராக்கெட் திட, திரவ மற்றும் கிரோயோஜெனிக் வகை எந்திரங்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்டது. இதில் ஏவப்பட உள்ள 36 செயற்கைக்கோள்களும் 640 டன் எடை கொண்டவை.

வணிக ரீதியில் முதல் முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைகோள்களை சுமந்து சென்றது. இந்த செயற்கைகோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.  

ஒன்வெப் நிறுவனமானது உலக நாடுகளுக்கு அதிவேக இணையதள சேவையை வழங்குவதற்காக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், இந்த 36 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

 

மேலும் சந்திராயன்-3 விண்கலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Related Stories: