போதை தடுப்பு பிரிவு போலீசாரின் பிடியிலிருந்து தப்பி மூன்றாவது மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை: 50 கிலோ போதை பொருள் பறிமுதல்

சென்னை: போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் பிடியிலிருந்து தப்பி, மூன்றாவது மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை செய்து  கொண்டார். ஆவடி ஆணையரக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 20ம் தேதி, செங்குன்றம் அருகே உள்ள காரனோடை டோல் கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த சொகுசு காரில் 50 கிலோ போதை பொருள் இருந்தது. இதையொட்டி காரை ஓட்டி வந்த  ஐதராபாத்தை சேர்ந்த ராயப்ப ராஜூ அந்தோணியை (39) கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கட்டுப்பாட்டுதுறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், அந்த அலுவலகத்திலிருந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நேற்றுமுன் தினம் இரவு தயார் நிலையில் இருந்தனர். அப்போது அந்தோணி திடீரென 3வது மாடியிலிந்து குதித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த  போதை பொருள் தடுப்புபிரிவு போலீசார் அந்தோணியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அந்தோணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில், அந்தோணி மீது 2013ம் ஆண்டில், ஐதாரபாத் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடதக்கது.

Related Stories: