முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு: அரசாணை வெளியீடு

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்கை வழிகாட்டுதலை வழங்க, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்க முதல்வர் தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா இன்போசிஸ் தலைவர் நந்தன், நிலகேனி உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளார். தமிழக அரசின் முத்த அரசு செயலாளர்கள், காலநிலை மற்றம் தொடர்பான வல்லுநர்களும் குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர். காலநிலை மாற்ற செயல்திட்டத்தினை உருவாக்கி அதனை  செயல்படுத்துவதற்கான வழிகாட்டுத்தல்களை இக்குழு தயாரிக்க உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.  காலநிலை மாற்ற நிர்வாக குழு, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கு உரிய வழிகாட்டுதல் ஆலோசனைகளை வழங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

குழுவில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் இடம்பெற்றுள்ளனர். நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமணசந்திரன் நியமனம் செய்துள்ளனர். ஐ.நா.சுற்றுசூழல் திட்ட செயல் இயக்குனரான நார்வே நாட்டை சேர்ந்த எரிக் சோல்ஹிம் குழுவில் நியமனம் செய்துள்ளனர். காலநிலை மாற்ற நிர்வாக குழுவானது 3 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கு ஏற்ப கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: