தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை களைகட்டியது

சென்னை: தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை கலைக்கட்டியுள்ளது. சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையையெட்டி இந்த ஆண்டு 47 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டன. கடந்த 17-ம் தேதி பட்டாசு விற்பனை தொடங்கிய நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து பட்டாசுகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

பட்டாசு விற்பனை அமோகமாக நடந்து வருவதாகவும், மக்கள் இடையே நல்ல வரவெப்பு இருப்பதால் 25% தள்ளுபடியை மேலும் ஒரு நாள் 22-ம் தேதி வரை நீடித்திருப்பதாக பட்டாசு விற்பனை சங்கத்து உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கிருப்பதால் தையரிக்கப்படும் பட்டாசுகளை உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகளை தொழிலாளர்கள் ஈடுப்பட்டுள்ளார்.

சென்னையில் ஒருசில பகுதிகளில் உரிய அனுமதியின்றி கள்ளச்சந்தையில் பட்டாசு விற்பனை நடைபெற்று வருவதாகவும் அதனை அரசு உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனவிக்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக உற்சாகத்துடன் பட்டாசு விற்பனை கலைக்கட்டிருப்பதால் பட்டாசு விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Related Stories: