நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தமிழக மீனவர் காயம்: மீனவரை சந்தித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல்

மதுரை : தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மயிலாடுதுறை மீனவர் ஒருவர் காயம் அடைந்துள்ளார். இதையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் காயமடைந்த மீனவர் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் காயமடைந்த மீனவரை சந்தித்து மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்;

தெற்கு மன்னார் வளைகுடாவில் மீன்பிடித்த பொது இந்திய கடற்படை துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதனால், மீனவரின் வயிறு மற்றும் தொடையில் குண்டுகள் பாய்ந்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் உத்தரவுப்படி, நேரில் வந்து மீனவரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தோம் என அவர் தெரிவித்தார். கடற்படையால் சுடப்பட்ட மீனவரின் உடல்நலம் தற்போது சீராக இருக்கிறது எனவும், உயர் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். அவரின் உடல் நலம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related Stories: