பெரம்பூர் ஜமாலியா பகுதியில் கால்பந்தாட்ட திடல் அமைப்பது தொடர்பாக மேயர் நேரில் ஆய்வு

பெரம்பூர்: பெரம்பூர் ஜமாலியா பகுதியில் கால்பந்தாட்ட திடல் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் பிரியா ஆய்வு செய்தார். திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள கட்டிடக் கழிவுகள் கொட்டும் இடத்தை நேற்று காலை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் திருவிகநகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது குறிப்பிட்ட அந்த இடத்தில் கால்பந்தாட்ட மைதானம் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. அப்பகுதி இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கால்பந்தாட்ட கூடம் அமைக்க வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சந்திரயோகி சமாதி தெரு பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பழுதுபார்க்கும் பணியினை மேயர் ஆய்வு செய்தார்.  அதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள குப்பை லாரிகள் நிறுத்துமிடத்தில் தனியாக அலுவலகம் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.  நிகழ்வின்போது திருவிக நகர் மண்டல அதிகாரி முருகன், செயற்பொறியாளர் சரவணன், உதவிப் பொறியாளர் சரஸ்வதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: