ஜம்மு - காஷ்மீரில் 2 வெளிமாநில தொழிலாளர் கையெறி குண்டு வீசி கொலை: தீவிரவாதிகள் அட்டகாசம்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் வீசிய கையெறி குண்டுகளால் உத்தர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டம், ஹார்மென் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் சிலர், இன்று அதிகாலை கையெறி குண்டுகளை வீசியதில் இரண்டு புலம்பெ யர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் தீவிரவாதிகள் சிலர், ஹார்மென் பகுதியில் வசிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கையெறி குண்டுகளை வீசினர்.

இந்த சம்பவத்தில், உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் குமார், ராம் சாகர் ஆகிய 2 தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தொடர்ந்து அப்பகுதி பாதுகாப்பு படையினாரால் சுற்றி வளைக்கப்பட்டு பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, ​​கையெறி குண்டுகளை வீசிய தீவிரவாதி இம்ரான் பஷீர் கனி என்பவனை கைது செய்துள்ளோம். தொடர்ந்து, அங்கு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது,’ என்று தெரிவித்தனர்.

Related Stories: