உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக D.Y.சந்திரசூட் நியமனம்: குடியரசுத்தலைவர் ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்யை நியமிக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி D.Y. சந்திரசூட் அடுத்த மாதம் பதவியேற்கவுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த N.V.ரமணா கடந்த ஆகஸ்ட் மாதம் ஒய்வு பெற்றதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக U.U.லலித் பொறுப்பேற்றார்.

தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் U.U.லலித் அடுத்த மாதம் 8-ம் தேதியுடன் பணி நிறைவு செய்ய உள்ளார். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக D.Y.சந்திரசூட்-ஐ நியமிக்க தலைமை நீதிபதி U.U.லலித் பரிந்துரை செய்துள்ளார்.

இதையடுத்து உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக D.Y.சந்திரசூட்-ஐ நியமிக்க குடியரசுத்தலைவர் திரெளபத்தி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக D.Y.சந்திரசூட் அடுத்த மாதம் பதவியேற்கவுள்ளார்.

Related Stories: