பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

சென்னை: சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி எம்கேபி நகரில் நடைபெற்றது. இதில், 250 கர்ப்பிணிகளுக்கு 5 வகையான சாதம் மற்றும் அறுசுவை உணவு மற்றும் சீர்வரிசை வழங்கப்பட்டது. மேலும், பெண்கள் கர்ப்பமான நாள் முதல் குழந்தைகள் பெற்று குழந்தைகளை வளர்க்கும் நாள் வரை உள்ள ஆயிரம் நாட்களுக்கு கர்ப்பிணிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.

ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்வது குறித்து தெளிவான வழிமுறைகள் உள்ளடக்கிய கையேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாவட்ட திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்ட அலுவலர் சுஜிதா தேவி, மாமன்ற உறுப்பினர் மலைச்சாமி, டில்லிபாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: