தீபாவளி பண்டிகை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரம்: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை: கூட்டத்தை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய மப்டியில் குற்ற பிரிவு போலீசார் ரோந்து பணியில் உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டியில் தெரிவித்தார். நெருங்கி வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக துணிகள் பட்டாசு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சென்னை மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் தியாகராய நகர் பகுதியில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் பொதுமக்களுக்கு இடையூறு பாதுகாப்புகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து  நடந்து சென்று பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரியிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘பாண்டி பஜார் தி நகர், மாம்பலம் காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொது மக்களுக்கு பயன்பெறும் வகையில் MAY I HELP YOU DESK போடப்பட்டுள்ளது போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆட்டோ மற்றும் கார்களுக்கு தனி வழி அமைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். முதல்முறையாக தியாகராய நகரில் ஆறு FRC கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் குற்றவாளிகளை கண்டறிவதற்காகக் குற்றப்பிரிவு போலீசார் மப்டியில் உள்ளதாகவும் இந்த கேமராக்கள் மூலம் பில்டர் செய்து ஏற்கனவே குற்றங்கள் அவர்கள் மீது உள்ளதா என்பது குறித்து கண்டறியவும் உதவியாக இருக்கும் என்றார்.

மேலும், அதற்கான முழு முயற்சியிலும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். வழக்கத்திற்கு மாறாக 50 கேமராக்கள் கூடுதலாக போடப்பட்டுள்ளது எனவும், ஏற்கனவே உள்ள 250 சேர்த்து மொத்தம் 300 கேமராக்கள் மூலம் தியாகராய நகர், பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

மூன்று இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு குறிப்பிட்ட வாகனங்கள் மட்டுமே தியாகராய நகர் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட வருவகின்றன. மேலும் தியாகராய நகர் பகுதி சுற்றி போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் வாகன நெரிசல் குறையும் என்று கூறினார்.

Related Stories: