66 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்; இந்திய தயாரிப்பு மருந்து எங்களிடம் இல்லை: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

அபுதாபி; காம்பியாவில் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியான விவகாரத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தின் மருந்துஎங்களிடம் இல்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இருமல் மருந்து குடித்து 66 குழந்தைகள் பலியான சம்பவம் ஒட்டுமொத்த மனித குலத்தையே உலுக்கியது. குழந்தைகள் இறப்புக்கு இந்தியாவின் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்த 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

அதனால், அந்த மருந்துகள் விற்பனையை நிறுத்த அறிவுறுத்தியது. தொடர்ந்து இந்திய அரசும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சின் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்த நான்கு வகையான மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது.

இந்த மருந்துகளை பயன்படுத்திய எவருக்கேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டிருந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும். ேமலும் பிரச்னைக்குரிய அந்த இருமல் மருந்து எங்களது நாட்டின் மருந்து நிறுவனங்களில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளோம்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: