உபி போலீசார் - கிராம மக்கள் மோதல் துப்பாக்கிச் சண்டையில் பாஜ தலைவர் மனைவி பலி: குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் பரிதாபம்

டேராடூன்: உத்தர பிரதேச மாநிலம்., மொரதாபாத்தில் சுரங்கம் சம்பந்தப்பட்ட  குற்றங்களில் ஈடுபட்டு வந்தவன் சபர். இவனை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.50 ஆயிரம் பரிசு அளிப்பதாக உபி போலீசார் அறிவித்து இருந்தனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜஸ்பூர் கிராமத்தில் இவன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததும், உபி  போலீஸ் தனிப்படை அங்கு விரைந்தது. அங்குள்ள உள்ளூர் பாஜ தலைவர் குர்தா ஜ் புல்லரின் வீட்டில் அவன் பதுங்கி இருப்பதாக சந்தேகித்த உபி போலீசார், அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது, அந்த கிராம மக்கள் போலீசாரை   தாக்கினர். இருதரப்புக்கும் போலீஸ் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில், உபி போலீசார் சுட்டதில் புல்லரின் மனைவி குர்பிரீத் கவுர் மீது குண்டு பாய்ந்து இறந்தார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உபி போலீசாரை கடுமையாக தாக்க தொடங்கினர். அவர்கள் சுட்டதில்,  2 போலீசார் காயமடைந்தனர். மேலும், 4 போலீசாரை கிராம மக்கள் பிணைக்கைதியாக பிடித்தனர். அவர்களின் ஆயுதங்களை பறித்தனர். தனிப்படையில் சென்ற 2 போலீசாரை காணவில்லை. இந்த மோதல் காரணமாக, ஜஸ்பூர் கிராமம் போர்க்களமாக மாறி விட்டது. இந்த சம்பவம் தொடர்பாகவும், குர்பிரீத் கவுர் கொல்லப்பட்டதாலும் உபி போலீசார் மீது உத்தரகாண்ட் போலீசார் கொலை கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: