குஜராத் கடற்பகுதியில் ரூ.350 கோடி மதிப்பு ஹெராயினுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

ஆமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் குஜராத் கடற்கரை பகுதியில் ரூ.350 கோடி மதிப்பு கொண்ட 50 கிலோ ஹெராயினுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது.

 இந்திய கடற்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சோதனையில் பாகிஸ்தானுக்கு சொந்தமான அல் சகார் என்ற படகு சிக்கியது. அதில் சோதனை நடத்தியதில் 50 கிலோ ஹெராயின் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.350 கோடி ஆகும். இதனையடுத்து அந்த படகையும், அதில் இருந்த 6 பேரையும் ஜகாவு பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

கடலோர காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், இவ்வாறு சோதனை நடத்துவது, இந்தாண்டில் மட்டும் இது 6வது முறையாகும். இதற்கு முன் கடந்த 14 ம் தேதி நடந்த சோதனையில் பாகிஸ்தானை சேர்ந்த படகு சிக்கியது. அதில் இருந்து ரூ.240 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: