மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 12 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டு 12 பேர் உயிரிழந்துள்ளனர். மராட்டியத்தில் நாசிக் நகரில் அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பஸ் ஒன்று இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பஸ் தீப்பிடித்து கொண்டது. தீ மளமளவென பஸ் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதனால், பஸ்சுக்குள் சிக்கி கொண்ட பயணிகள் வெளியே வர முடியாமல் பரிதவித்தனர். இந்த விபத்தில் மற்றும் தீயில் சிக்கி 12 பயணிகள் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களில் ஒரு குழந்தை மற்றும் 11 பெரியவர்கள் அடங்குவார்கள். 32 பேர் வரை காயமடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். பஸ் தீ பிடித்து எரிந்தது பற்றிய தகவல் அறிந்ததும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றுள்ளனர். தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. பேருந்தில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.

Related Stories: