பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய ரேஷன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம்: இன்று நடக்கிறது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் இன்று (8ம் தேதி) நடைபெற உள்ளது. அதன்படி, திருவள்ளூர் வட்டம், எறையாமங்களம் நியாய விலைக்கடை, ஊத்துக்கோட்டை வட்டம், சென்னங்காரணை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பூந்தமல்லி வட்டம், படூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், திருத்தணி வட்டம், ஒரத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பள்ளிப்பட்டு வட்டம், பாத்தகுப்பம்    நியாய விலைக்கடை, பொன்னேரி வட்டம், தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி வட்டம், அயற்கண்டிகை நியாய விலைக்கடை, ஆவடி வட்டம், அன்னம்பேடுநியாய விலைக்கடை, ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி    நியாய விலைக்கடை ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

எனவே சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம். மேலும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்களும் ஆன்லைனில் பதிவு செய்யுமாறும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: