காணாமல் போன 119 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒராண்டில் செல்போன் காணாமல் போனது மற்றும் திருடு போனது சம்மந்தமாக காவல் நிலையங்களில் பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.  மேலும் செல்போன் பறிப்பு  சம்மந்தமாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபாஸ் கல்யாண் உத்திரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  மீனாட்சி  மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்ட சைபர் பிரிவின் உதவியோடு காணாமல் போன மற்றும் திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நேற்று காணாமல் போனது மற்றும் திருடு போனது சம்பந்தமான வழக்கில் கைப்பற்றப்பட்ட செல்போன்களில் 119 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி., பா.சிபாஸ் கல்யாண் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து ஒப்படைத்தனர்.

Related Stories: