சார் - ஆட்சியர்கள், துணை ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு..!!

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார் - ஆட்சியராக சரண்யா, பொன்னேரி துணை ஆட்சியராக ஐஸ்வர்யாவை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. துணை ஆட்சியர்களாக எஸ்.பிரியங்கா (பொள்ளாச்சி), ஸ்ருதஞ்சய் நாராயணன் (திருப்பூர்), கட்ட ரவி தேஜா (திண்டிவனம்) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செய்யாறு துணை ஆட்சியராக அனாமிகா, பத்மநாபபுரம் சார் ஆட்சியராக எச்.ஆர். கவுஷிக் நியமனம் செய்யப்பட்டனர்.

Related Stories: