பருவமழையை எதிர்கொள்ள சென்னையில் 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளன: அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி சார்பில் 741 மோட்டார்

பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு; மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. பணிகள் முடியாத இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுக்காப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 34 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் முறையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ரெடிமேட் கான்கிரீட் முறையில் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் உள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்; சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போஜராஜன் நகருடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் 1989ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த திட்டத்தில் ரயில்வே தரப்பில் சுரங்கப்பாதை முடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பல ஆண்டுகள் கோரிக்கைக்கு விடுத்த சூழலில் முதலமைச்சர் ஆணைக்கு ஏற்ப ரூ.13.40 கோடி மதிப்பில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. 18 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: