முஸ்லிம் பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை: தமிழில் ‘துருவ நட்சத்திரம்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘மோகன்தாஸ்’, ‘டிரைவர் ஜமுனா’, ‘தீயவர் குலைகள் நடுங்க’, ‘சொப்பன சுந்தரி’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், இதை அடுத்து ‘ஃபர்ஹானா’ என்ற படத்தில் முஸ்லிம் பெண்ணாக நடிக்கிறார். திரில்லர் கதை  கொண்ட இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். ‘ஒருநாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ ஆகிய படங்களை தொடர்ந்து நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தவிர இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதுகிறார். நெல்சன் வெங்கடேசன், சங்கர் தாஸ், ரஞ்சித் ரவீந்திரன் இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியாகிறது.

Related Stories: