காயத்தால் விலகினார் பிரிடோரியஸ்

லக்னோ: தென் ஆப்ரிக்க அணி ஆல் ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ், காயம் காரணமாக இந்தியாவுடன் நடக்கும் ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் உலக கோப்பை டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்திய அணியுடன் இந்தூரில் நடந்த 3வது டி20 போட்டியில் விளையாடியபோது, பிரிடோரியசின் இடது கை கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயத்துக்கு அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், நடப்பு ஒருநாள் போட்டித் தொடரிலும் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரிலும் பிரிடோரியஸ் விளையாட மாட்டார் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஒருநாள் தொடரில் அவருக்கு பதிலாக, உலக கோப்பைக்கான அணியில் மாற்று வீரராக இடம் பெற்றுள்ள மார்கோ ஜான்சென் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நடுவரிசை பேட்ஸ்மேன் வாண்டெர் டுஸன் காயம் காரணமாக விலகிய நிலையில், பிரிடோரியசும் விலகியுள்ளது தென் ஆப்ரிக்க அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

Related Stories: