வணிக ரீதியான 2 கிலோ மற்றும் 5 கிலோ எடைகொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இந்தியன் ஆயில் நிறுவனம், தமிழக கூட்டுறவுத்துறை இணைந்து அறிமுகம்

சென்னை: வணிக ரீதியான 2 கிலோ மற்றும் 5 கிலோ எடைகொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து தமிழக கூட்டுறவுத்துறை இன்று அறிமுகபடுத்தப்படவுள்ளது. 2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கு முன்ன என்றும், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டருக்கு சொட்டு பெயரிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கம் வாயிலாக இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த வணிக ரீதியான 2 கிலோ மற்றும் 5 கிலோ எடைகொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்றுமுதல் அறிமுக படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறுவணிகர்கள், மீனவர்கள், மாணவர்கள், சுற்றுலா செல்பவர்கள் வசதிக்காக 2 கிலோ மற்றும் 5 கிலோ எடைகொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

இதனை முதற்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அறிமுகப்படுத்தவுள்ளது. 2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் முதன் முறையாக வாங்கும் போது ரூ.961.50-க்கும், மீண்டும் நிரப்பும் போது ரூ.253-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் முதன் முறையாக வாங்கும் போது ரூ.15228-க்கும், மீண்டும் நிரப்பும் போது ரூ.584-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம்  தெரிவித்துள்ளது.

Related Stories: