கோவை - ஜபல்பூர் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஜன. 2ம் தேதி வரை நீட்டிப்பு..!!

சென்னை: கோவை - ஜபல்பூர் (02197) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் ஜபல்பூர்  - கோவை (02198) இடையே வாரம் ஒரு முறை இயக்கப்படும் சிறப்பு ரயில் டிசம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை - ஜபல்பூர் ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்:

* அக்டோபர் 10 முதல் 31 வரை (திங்கள் மட்டும்) கோவையில் இருந்து 15.25க்கு புறப்படும் ரயில் புதன் காலை 8.45க்கு ஜபல்பூர் செல்லும்.

* நவம்பர் 7 முதல் ஜனவரி 2 வரை (திங்கள்) கோவையில் இருந்து 17.05 மணிக்கு புறப்படும் ரயில் புதன் காலை 8.45க்கு ஜபல்பூர் செல்லும்.

ஜபல்பூர் - கோவை: வந்துசேரும் நேரத்தில் மாற்றம்:

* அக்டோபர் 7 முதல் அக்டோபர் 28 வரை ( வெள்ளி மட்டும்) ஜபல்பூரில் இருந்து 23.50 மணிக்கு புறப்படும் ரயில் ஞாயிறு 17.10க்கு கோவை வரும்.

* நவம்பர் 4 முதல் டிசம்பர் 30 வரை ( வெள்ளி மட்டும்) ஜபல்பூரில் இருந்து 23.50 மணிக்கு புறப்படும் ரயில் ஞாயிறு 14.40க்கு கோவை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: