தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை பிரிவு ஐஜி கண்ணன் வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பிரதீப் நியமனம்; சென்னை பரங்கிமலை காவல்துறை துணை ஆணையராக தீபக் சிவாச் நியமனம்; சென்னை காவல்துறை கிழக்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக சமாய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: