மருத்துவ கல்லூரி முதல்வர்களாக 6 பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு

சென்னை: மருத்துவ கல்லூரி முதல்வர்களாக 6 மருத்துவ கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனராக இருந்து நாராணயசாமி, செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி முதல்வராகவும், கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனர் திருப்பதி கடலூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராஜாஸ்ரீ திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், திருச்சி மருத்துவ கல்லூரி பேராசிரியர் சிவக்குமார் தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வராக பதிவு உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தேனி மருத்துவ கல்லூரிக்கும், தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கும் மாற்றப்பட்டள்ளனர்.

Related Stories: