உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கிய 10 பேர் பலி: 11 பேரை தேடும் பணி தீவிரம்

டேராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் திரௌபதியின் தண்டா 2 என்ற மலை சிகரத்தில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி 10 மலையேறும் பயிற்சி பெறுபவர்கள் உயிரிழந்துள்ளனர். 8 பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர், மேலும் மேலும் 11 பேரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர்.

பனி சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில மீட்பு படையினர் மற்றும் இந்திய விமான படையின் 2 சீட்டா ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  பனி சரிவில் சிக்கிய அனைவரும் நேரு மலையேறும் இன்ஸ்டியூட்டில் பயிற்சி பெற்று வருபவர்கள் என தெரிவிக்கப்பட்டுளள்து. பனிச்சரிவு 16,000 அடி உயரத்தில் காலை 9 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மலையேறும் பயிற்சியாளர்கள் அனைவரும் 13,000 அடியில் உள்ள ஹெலிபேட் அமைந்து இருக்கும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு உத்தராகண்ட்  தலைநகர் டேராடூனுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உயரதிகாரி தகவல்.

இந்த விபத்து குறித்து  தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக உத்தராகண்ட்  முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories: