199 எஸ்ஐக்களுக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு: டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழக காவல்துறையில், 2008ம் ஆண்டு பணியில் சேர்ந்த சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, சென்னை மாநகர காவல் துறை, ஆவடி, தாம்பரம் காவல்துறை, க்யூ பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, சிபிசிஐடி, மாவட்ட காவல் நிலையங்கள் என பல்வேறு பிரிவுகளில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் 199 பேருக்கு, பணி மூப்பு அடிப்படையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது பதவி உயர்வு பெற்றுள்ள 199 இன்ஸ்பெக்டர்கள் படிப்படியாக காலியாக உள்ள இடங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: