முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நிறுவனத்தில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு

சென்னை: முட்டுக்காடு ஊராட்சியில் உள்ள ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவனத்தில் ஒன்றிய அமைச்சர் வீரேந்திரகுமார் ஆய்வு செய்தார். சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் முட்டுக்காடு ஊராட்சியில் ஒன்றிய அரசு நிறுவனமான மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசின் சார்பில் செய்யப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நிறுவன இயக்குனர் நச்சிகேதா ரவூத் தலைமை தாங்கினார். துணை பதிவாளர் அமர்நாத் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் அமைச்சர் வீரேந்திரகுமார் கலந்துக் கொண்டு அரசின் திட்டங்கள், அவை செயல்படுத்தப்படும் விதம், பயன்பெறும் பயனாளிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறனாளிகள் மேலாண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் திறன் மேம்பாடு மற்றும் பல் ஆரோக்கியம் குறித்த புத்தகங்களும், சைகை மொழி வீடியோக்களும் வெளியிடப்பட்டது. ஆய்வின்போது, மாற்றுத்திறனாளிகளிடம் ஒன்றிய அமைச்சர் கலந்துரையாடினார். நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் இராகுல்நாத், முட்டுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மயில்வாகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: