பெண் மருத்துவரை மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் அனுமதிக்குமாறு மத்திய மருத்துவ சேர்க்கை குழுவிற்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: பெண் மருத்துவரை மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் அனுமதிக்குமாறு மத்திய மருத்துவ சேர்க்கை குழுவிற்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரை மணமுடித்தால், பிறப்பிடம், இதர பிற்

படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று மறுக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. புதுச்சேரி மருத்துவர் ஹேமா, மேற்படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்காக பிறப்பிடம், ஓ.பி.சி. சான்று கோரி விண்ணப்பித்தார். திருக்கோவிலூரை சேர்ந்தவரை மணந்து கொண்டதால், பிறப்பிட சான்று, ஓ.பி.சி. சான்று வழங்க மறுத்து தாசில்தார் உத்தரவிட்டார். புதுச்சேரி தாசில்தாரர்உத்தரவுக்கு எதிராக ஹேமா தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: