போதையில் கார் ஓட்டி விபத்து பாஜ பிரமுகருக்கு அடி உதை: 4 பேர் படுகாயம்

அம்பத்தூர்: சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரை சேர்ந்தவர் நரசிம்மன் (48). மாநில பாஜ முன்னாள் தொழில்துறை செயலாளர். இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தனது காரில் வில்லிவாக்கம் நாதமுணி அருகே சென்றுள்ளார். திடீரென சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த 4 பேர் மீது இவரது கார் மோதியது. காயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து, மதுபோதையில் தள்ளாடியபடி காரில் இருந்து இறங்கிய நரசிம்மனை மடக்கி பிடித்து, அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை வில்லிவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஹரி வழக்குப்பதிவு செய்து நரசிம்மனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: