ஆந்திர கடலோரத்தில் வளி மண்டல சுழற்சி, தமிழகத்தில் லேசான மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6ம் தேதி வரை லேசான  மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தென் மேற்கு பருவமழை விரைவில் விடை பெற உள்ளது. இந்நிலையில், தொடர்ந்து நீடித்து வரும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, ஒகனேக்கல், ஓசூர், ராசிபுரம், சங்ககிரி பகுதிகளில் 20மிமீ மழை பெய்துள்ளது.

சேந்தமங்கலம், புதுச்சத்திரம், எடப்பாடி, தேன்கனிக்கோட்டை, செய்யார், பாரூர், காஞ்சிபுரம், பென்னாகரம், பந்தலூர் பகுதிகளில் 10மிமீ மழை பெய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 6ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில்  சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ முதல் 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: