தமிழகம் முழுவதும் 47 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு; பள்ளி கல்வித்துறை உத்தரவு

சென்னை: அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் 47 பேருக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும்  47 பேர் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் பெறுகின்றனர். அவர்களில் 41 தலைமை ஆசிரியர்கள்  மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். மீதம் உள்ளவர்களில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியியல் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்.

இதையடுத்து, திருச்சி அம்பிகாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி  தலைமை ஆசிரியர் சத்தியபாமா, சென்னை சைதாப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராகவும்(தனியார் பள்ளிகள்) , திருவண்ணாமலை மாவட்டம் பாதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராகவும்(தனியார் பள்ளிகள்) சென்னை ஜிகேஎம் காலனி அரசு மாதிரி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி- திருவள்ளூர் பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலராகவும்(இடைநிலைக் கல்வி), திருவள்ளூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலக நேர் முக உதவியாளர் தேன்மொழி- திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலராக(இடைநிலைக் கல்வி), திருவள்ளூர் மாவட்டம் கோவில்பதாகை நகரவை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வள்ளி நாயகம்- காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலராக(இடைநிலைக் கல்வி), சென்னை சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி- சென்னை பள்ளிக் கல்வி ஆணையரக உதவி இயக்குநராகவும், திருவள்ளூர் மாவட்ட உளுந்தை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி- சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உதவி இயக்குநராகவும், நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: