காந்தி பிறந்த நாள், காமராஜர் நினைவு நாள் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை:  காந்தியடிகளின் 154-வது பிறந்த தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

எழும்பூரில் உள்ள காந்தி சிலைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், சக்திவேல், மாவட்ட தலைவர் சைதை மனோகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜர் நினைவு நாள்: பெருந்தலைவர் காமராஜரின் 48வது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்தில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் பிரபாகர் ராஜா எம்எல்ஏ, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாஜ சார்பில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பாஜவினர் கலந்து கொண்டனர்.அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் விருகை ரவி, முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாைதை செலுத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கட்சி தலைவர் திருமாவளவன் காமராஜர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் தமிழ்நாடு இளைஞர் சங்கம் மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் இளைஞர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பல கட்சிகளின் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

Related Stories: