காஞ்சிபுரம் ஸ்ரீசங்கரா கல்லூரியில் எலைட் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் லேப் தொடக்க விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எலைட் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் லேப் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வினுசக்ரவர்த்தி வரவேற்றார். கல்லூரி தலைவர் குமாரகிருஷ்ணன், செயலாளர் ரிஷிகேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிஎஸ்ஆர் ரெடிங்டன் நிறுவன திட்ட மேலாளர் பிரசன்ன வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு எலைட் ஸ்மார்ட் கம்ப்யூட்டர் லேபை தொடங்கி வைத்தார். அப்போது, வரவிருக்கும் போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து உரையாற்றினார்.  விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: