காந்தி பிறந்த நாளான இன்று 1 கோடி காதி, கைத்தறி துணி விற்க முடிவு; அமெட் பல்கலை மாணவர்கள் வீடு, வீடாக செல்கின்றனர்

சென்னை: அமெட் பல்கலை நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் நாசே ராமச்சந்திரன் வழிகாட்டுதலின் படி ஒரே நாளில் ஒரு கோடி விற்பனை இலக்குடன் காதி மற்றும் கைத்தறித் துணிகளை மாணவர்கள் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர். தமிழக அரசின் காதி மற்றும் கைத்தறித் துறைகளுடன் இணைந்து சென்னை, அமெட் பல்கலைக்கழகத்தின் 4000 மாணவர்கள் காந்தி பிறந்த நாளான இன்று இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று விற்பனை செய்ய உள்ளனர். அதற்கான விழிப்புணர்வினை பொதுமக்களிடம் ஏற்படுத்துவதற்காக நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி வீடு வீடாகச் சென்று விற்பனை தொடர்பான நோட்டீசுகளை விநியோகித்து 1 கோடி விற்பனை என்ற இலக்குடன் அமெட் பல்கலை மாணவர்கள் களமிறங்கி உள்ளனர்.

மேலும் இத்திட்டத்தின் தொடக்கவிழா இன்று காலை 6.30 மணிக்கு அமெட் பல்கலைக்கழக வளாகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்ஆர்.காந்தி தொடங்கி வைக்கிறார். இவ்விழாவிற்கு அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் நாசே ராமச்சந்திரன் தலைமையேற்க உள்ளார்.

இத்திட்டத்தை கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்தர பிரதாப் யாதவ், செயலாளர்கள் சங்கர்  மற்றும் ராஜேஷ்  ஆகியோரும், அமெட் பல்கலை துணைவேந்தர் கர்னல் திருவாசகம், பதிவாளர் ஜெயபிரகாஷ்வேல் மற்றும் மாணவர் நலன் டீன் என்.ஆர்.ராம்குமார் ஆகியோர் முன்னெடுத்துச் செல்லுகின்றனர்.

Related Stories: