கிணத்துக்கடவு அருகே தமிழக அரசு சார்பில் ரூ.18 கோடியில் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் தீவிரம்

மதுக்கரை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம் சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையம் கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.18.063 கோடி செலவில் தொழிற்பேட்டை அமைக்கும் பணியினை 25.8.2022 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து அங்கு தொழிற்பேட்டை அமைக்கும் பணிகள் துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக 65 ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த நிலத்தில் கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் அகலமான சாலைகளும் அதனை ஒட்டி கழிவுநீரை வெளியேற்ற சாக்கடை கால்வாய்கள் அமைப்பதற்காக பொறியியல் துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த அளவீடு செய்யும் பணி முடிவடைந்ததும் அடுத்தக்கட்டமாக  தார் சாலை அமைக்கும் பணியும், சாக்கடை கால்வாய்கள் கட்டும் பணியும் நடைபெறும்.

அது முடிந்ததும் தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகள் துவங்கும். இந்த தொழிற்பேட்டையில் முதல் கட்டிடமாக கட்டுமான பணியில் ஈடுபடும் பொறியாளர்கள் அங்கேயே தங்கி பணியாற்றும் வகையில் அலுவலக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

Related Stories: