மீண்டும் குறையும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.50 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை..நகை பிரியர்கள் உற்சாகம்..!!

சென்னை: தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது. குறிப்பாக கடந்த வாரம் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் சரிவை கண்டு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதுமட்டுமின்றி இவ்வாரத்தின் முதல் 2 தினங்களில் தங்கத்தின் விலை இறங்குமுகமாகவே  விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி தங்கத்தின் விலை எதிர்பாராத விலையில் அதிரடி உயர்வை கண்டது.

அதாவது, சென்னையில் ஆபரணத் தங்கம், சவரனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.37,440க்கும், கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.4,680க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 காசு அதிகரித்து ரூ.61.50 க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று சரிவடைந்துள்ளது. அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.37,520-க்கும், கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,690-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: