ரவுடி கொலை வழக்கில் போலீசில் 5 பேர் சரண்

வேளச்சேரி: மேடவாக்கம், புஷ்பா நகரை சேர்ந்த ரவுடி பிரைட்  ஆல்வின் (28) கடந்த 27ம் தேதி வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அருகில், பெருமாள் (23) என்பவர்  வெட்டு காயங்களுடன்   மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் பள்ளிக்கரைணையை சேர்ந்த அஜய் என்பரின் தம்பிக்கும், ஆல்வின் நண்பருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆல்வின்   கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். இதற்காக ஆல்வின் ரூ10 ஆயிரம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதை அஜய் கண்டித்துள்ளார். அப்போது ஆல்வின் மறைத்து வைத்திருந்த கத்தியை  எடுத்து அஜயை வெட்ட முயன்றார்.

இதில், ஆத்திரமடைந்த அஜய் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஆல்வினை வெட்டி கொன்றுள்ளார். தடுத்த பெருமாளையும் வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதையடுத்து, அஜய் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடிவந்த நிலையில்  நேற்று அஜயின் நண்பர்களான பள்ளிக்கரணை அழகிரி தெருவை சேர்ந்த கிங் ஸ்லி பவுல் (22), பிரவீன் (20), பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த அற்புத தேவசீலன்(27), இம்மானுவேல் தெருவை  சேர்ந்த சிவா (20), பெருங்குடியை சேர்ந்த சிவக்குமார் (21) ஆகியோர்  காவல்நிலையத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள அஜயை தேடி வருகின்றனர்.

Related Stories: