கால்நடை மருத்துவ படிப்பு நாளை மறுநாள் முதல் விண்ணப்பம் சரிபார்க்கலாம்: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கைக்குழு அறிவிப்பு

சென்னை: பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கால்நடை பல்கலை வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தில் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலம் செப்டம்பர் 12ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். நாளை மறுநாள் முதல் 6ம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரி செய்து, சான்றிதழ் நகல்கள் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அதன் பின்னர் எந்த ஒரு திருத்தமும் செய்ய முடியாது. அயல்நாடு வாழ் இந்தியர், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினர் ஆகியோர் 14ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Related Stories: