சென்னையில் சோழர் காலத்து 7 வெண்கல சிலைகள் மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் பறிமுதல்..!

சென்னை: சென்னையில் சோழர் காலத்து 7 வெண்கல சிலைகள் மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சோழர் காலத்து 7 வெண்கல சிலைகள் மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியருக்கு சொந்தமான வீட்டில் இருந்து இந்த சிலைகளானது பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு வீட்டில் சிலைகள், ஓவியங்களை வைத்துவிட்டு அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையானது நடத்தி வருகின்றனர்.

சிலைகளை தனது பெற்றோர் வைத்திருந்ததாகவும், தனக்கு அதுகுறித்து விவரங்கள் தெரியாதும் என்றும் அந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் தெரிவித்திருக்கிறார். சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல் துறையினர் மூலம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை என்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அந்த நபரிடம் விசாரணையானது தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில்  வசித்து வரும் வெளிநாடு வாழ் இந்தியரை அழைத்து விசாரிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தற்பொழுது திட்டம் தீட்டி இருக்கிறது.

அங்கு உள்ளவர்கள் கொடுக்கப்பட்ட காலகட்டத்தில் ஆவணங்கள் சமர்பிக்கப்பாடாததால் சோழர்காலத்து 7 வெண்கல சிலைகள் மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சிலைகளின் தன்மை குறித்து தொல்லியல் துறையினர் மூலம் விசாரணை நடத்தி இந்து அறநிலைய துறையினரிடம் பல்வேறு தகவல்களை பெற்று இந்த சிலையை ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக சிலை கடத்தல் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.  

Related Stories: