ஆர்.எஸ்.எஸ் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் மதவாத இயக்கம்; எங்களின் மனித சங்கிலிக்கு அனுமதி கிடைக்கும்: திருமாவளவன் நம்பிக்கை

சென்னை: அக்டோபர் 2ல் அறிவிக்கப்பட்டுள்ள மனித சங்கிலி போராட்டத்துக்கு அனுமதி தொடர்பாக காவல்துறையினர் நேர்மறையான பதிலை எதிர்பார்ப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தாங்கள் அறிவித்துள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது திருமாவளவன், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் ஒரு மதவாத இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று குற்றம்சாட்டினார். அதேநேரத்தில் தாங்கள் மனித சங்கிலியாக ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து மட்டுமே நிற்க போவதால் காவல்துறையினர் நேர்மையான பதிலை தரார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல் கே.பாலகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தடை விதித்ததை வரவேற்பதாக தெரிவித்தார். அதேநேரத்தில் நாங்கள் மதவாத அமைப்பு அல்ல; மதவாத சக்திகளை எதிர்த்து மத நல்லிணக்கத்தை வற்புறுத்தக்கூடிய எங்களுடைய இயக்கத்திற்கு அனுமதி கொடுப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

Related Stories: