நல்லிணக்க மனித சங்கிலியில் காங்கிரசார் பங்கேற்க வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைமை அறிவிப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை குறிவைக்கும் வகுப்புவாத, பயங்கரவாதத்தை முறியடிக்கவும், சமய, சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கூட்டாக இணைந்து  அக்டோபர் 2ம் நாள் காந்தியடிகள் பிறந்த நாளன்று தமிழகமெங்கும் சமய நல்லிணக்க மனித சங்கிலி நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்கிறது.

சாதி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை முறியடிக்கும் நோக்கத்துடன் நடைபெறுகிற சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் தமிழகத்திலுள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.

Related Stories: