அனுமதியின்றி கட்டப்பட்ட 2 மாடி கட்டிடத்திற்கு சீல்

தாம்பரம்: அஸ்தினாபுரம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிபாபு. இவர் அனுமதியின்றி 2 மாடி கட்டிடம் கட்டியதாக சைதாப்பேட்டையை சேர்ந்த விஜயா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில், தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் ஹரிபாபுவுக்கு நோட்டீஸ் வழங்கினர். அவரது மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தாம்பரம் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் அந்த கட்டடத்திற்கு நேற்று சீல் வைத்தனர்.

Related Stories: